நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

தேசிய சவால்கள் மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட முன்னுரிமைகள் ஆகிய பகுதிகளில் புதுமைகளை உருவாக்க இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கைக்கோர்க்கின்றன

Posted On: 11 MAR 2023 11:50AM by PIB Chennai

அடல் புத்தாக்க இயக்கம் (ஏஐஎம்), நிதி ஆயோக்ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (சிஎஸ்ஐஆர்ஓ) ஆகியவை தேசிய சவால்களுக்கு தீர்வு காண்பதில் புதுமையான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தில் கையெழுத்திட்டன.

ஆஸ்திரேலியப் பிரதமர் திரு. அந்தோனி அல்பானீசின் இந்தியப் பயணத்தின் போதுபிரதமர் திரு. நரேந்திர மோடியை நேற்று புதுதில்லியில் சந்தித்தார். இரு தலைவர்களும்பரஸ்பர ஆர்வமுள்ள விஷயங்கள், புதுமைகளை ஒரு முக்கிய அம்சமாகக் கொண்ட  துறைகளில் இருதரப்பு ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.

ஏஐஎம் மற்றும் சிஎஸ்ஐஆர்ஓ இடையே செயல்பாட்டு திட்டத்தில் , பரஸ்பர ஆர்வம், மூலோபாய முன்னுரிமைகள் ஆகியவற்றில் அதிக ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளை ஒன்றிணைத்துபகிரப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சவால்களை ஸ்டார்ட்-அப்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களின் கூட்டாண்மைக்கு ஆதரவளிப்பதன் மூலம் எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  வணிகமயமாக்கல் வழிகள், சந்தைக்கு புதுமையான தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை கொண்டு வருதல், சுற்று  பொருளாதாரம், ஆற்றல் மாற்றம் போன்றவை இதில் அஇடம்பெற்றுள்ளன. இந்தத் திட்டம் இரு நாடுகளின் புதுமை சுற்றுச்சூழல் வளங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப் பொருளாதார  ஹேக்கத்தான் 2021  வெற்றிகரமாக நடத்தப்பட்டதில்இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களின் பங்களிப்பு இருந்தது.  உணவு அமைப்பு மதிப்புச் சங்கிலியில்  புதுமையான தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை அது உருவாக்கியது.

***

SRI/PKV/DL


(Release ID: 1905890) Visitor Counter : 176