குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவருடன் ஆஸ்திரேலியப் பிரதமர் சந்திப்பு
Posted On:
10 MAR 2023 5:49PM by PIB Chennai
ஆஸ்திரேலியப் பிரதமர் திரு.அந்தோணி அல்பாநீஸ், குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (2023, மார்ச் 10) சந்தித்துப் பேசினார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் திரு.அல்பாநீஸை வரவேற்றுப் பேசிய குடியரசுத் தலைவர் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நீண்ட கால நட்புறவுடன் திகழ்வதாகக் கூறினார். ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய வருகை இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சித் தெரிவித்தார். கனிம வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இருநாடுகளும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினர் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத்தினருக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த சூழலை வழங்க ஆஸ்திரேலிய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று திருமதி. திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
***
AP/PLM/SG/KPG
(Release ID: 1905711)