தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்துள்ளது
प्रविष्टि तिथि:
07 MAR 2023 3:43PM by PIB Chennai
தில்லியில் உள்ள துவார்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் மருந்தக தினம் 2023 நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இம்மருந்தகங்களில் குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் மோடி அரசு செயல்பட்டு வருவதாக திரு யாதவ் கூறினார்.
*****
AP/IR/RJ/RR
(रिलीज़ आईडी: 1904888)
आगंतुक पटल : 304