வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
“உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு” என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2023 மார்ச் 4ம் தேதி உரையாற்றுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 MAR 2023 4:54PM by PIB Chennai
“உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு” என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2023 மார்ச் 4ம் தேதி உரையாற்றுகிறார். பட்ஜெட் அறிவிப்புகளைத் திறம்பட செயல்படுத்துவது தொடர்பாக வல்லுநர்களுடன் ஆலோசனைகளைக் கூறும் வகையில் அரசு ஏற்பாடு செய்துள்ள 12 இணையவழிக் கருத்தரங்குகளில் இது 8-வது ஆகும்.
அமிர்த காலத்தில் வழிநடத்தும் வகையில் 7 அம்சங்களுக்கு மத்திய பட்ஜெட் முன்னுரிமை அளித்துள்ளது. அதில், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு என்பதும் ஒரு முன்னுரிமைத் துறையாகும். இது தொடர்பான இணையவழிக் கருத்தரங்கிற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. 3 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை திறம்பட அமல்படுத்துவது குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்படும்.
இதில் மத்திய அமைச்சர்கள் திரு.பியூஷ் கோயல், திரு. நிதின் கட்கரி, பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள், தொழில் துறையினர், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இணையவழியில் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கில் மாநில அரசுகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
***
AP/PLM/SG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1903993)
வருகையாளர் எண்ணிக்கை : 209