குடியரசுத் தலைவர் செயலகம்
போபாலில் 7-வது சர்வதேச தர்ம தம்மா மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்தார்
प्रविष्टि तिथि:
03 MAR 2023 2:12PM by PIB Chennai
போபாலில் இந்திய அறக்கட்டளையோடு சாஞ்ஜி பல்கலைக்கழகத்தின் பௌத்த-இந்திய ஆராய்ச்சிப் படிப்புகள் பிரிவோடு இணைந்து 7-வது சர்வதேச தர்ம தம்மா மாநாட்டை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (03.03.2023) தொடங்கிவைத்தார்.
தொடக்க விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், இந்திய இறை உணர்வான ஆலமரத்தின் வேர்கள் இந்தியாவில் உள்ளது. அதன் கிளைகளும், விழுதுகளும் உலகம் முழுவதும் பரவியுள்ளன என்றார்.
அறிஞர்களுக்கு தத்துவ அறிவை வழங்குவதற்கு பல கல்விக்கூடங்கள் உள்ளன. உலகளாவிய யோக தத்துவத்திற்கு ஒரே மொழிதான். தன்னிலை உணர்ந்த ஆத்மாக்கள் ஆசிரியர்களாகவும், குருஸ்தானத்தையும் அடைவதன் மூலம் அவர்களது பாரம்பரியம் நடைமுறைக்கு வந்தது. இதுபோன்ற பல்வேறு கலாச்சாரங்கள் இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவியது என்று கூறினார்.
தர்ம தம்மாவின் மையக்கருத்தானது, இந்திய மனச்சாட்சியின் அடிப்படைக் குரலாகும். நமது கலாச்சாரத்தில், “தர்மத்தை நிலைநாட்டுவோம்” என்று கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மனிதகுலமே மதம் என்ற அடித்தளத்திலேயே அமையப்பெற்றுள்ளது. தனிநபர்கள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு நட்புறவு, உயர்ந்த எண்ணம், அகிம்சை, அதிக ஈடுபாடு மற்றும் வெறுப்புணர்வு போன்றவைகளில் இருந்து முற்றிலும் விலகி இருத்தல் ஆகிய பண்புகள் கிழக்கத்திய மனிதநேயத்தின் முக்கிய உட்பொருளாக உள்ளது. அதாவது தனிநபர் ஒழுக்கம் மற்றும் சமூக ஒழுங்குமுறை போன்றவைகளே இதன் நீட்சியாகும். ஒவ்வொரு தனி மனிதரின் கடமையானது இத்தகைய ஒழுக்கம் உள்ள நடைமுறைகளை பேணிப்பாதுகாத்து வலுவடையச் செய்ய வேண்டும் என்றார்.
கிழக்கத்திய மனிதநேயம் இந்தப்பிரபஞ்சத்தை ஒழுக்கமுறை கோட்பாடாகக் கருதுகிறதே ஒழிய இந்த உலகப் போராட்டக்களமாக பார்ப்பதில்லை. இத்தகைய ஒழுக்கமுறை அடிப்படைகளை நிலைநிறுத்திக்கொள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களது தலைவிதியை நம்பாமல் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். போலியான மனக்கிளர்ச்சிகள் மூலம் தனிநபர்களுக்கிடையே மோதல்களும், நாடுகளுக்கிடையே போர்களும் நிகழ்வதாக கிழக்கத்திய மனித நேயம் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தியாவின் ‘வசுதைவ குடும்பகம்’ கோட்பாட்டின் அடிப்படையில் உலகமே ஒரே குடும்பம் என்ற நிலைப்பாட்டின் மூலம் கிழக்கத்திய மனிதநேயத்தின் தீர்மானமாக உள்ளது என்றார்.
நமது நாட்டின் கலாச்சாரம், சமூக அமைப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் மதம் நீக்கமற நிறைந்திருப்பதை எண்ணி நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். தர்ம தம்மாவின் ஆழ்ந்த தாக்கத்தை நமது ஜனநாயக முறையின் மூலம் தெளிவாக காணமுடியும்.
***
AP/GS/AG/KPG
(रिलीज़ आईडी: 1903955)
आगंतुक पटल : 213