பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக மாநிலம் பெலகாவி-ல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழா மற்றும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 13-வது தவணையின் விடுவிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 27 FEB 2023 8:25PM by PIB Chennai

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் அதன்பிறகு இந்தியாவின் நவநிர்மாணிலும் பெலகாவி எப்போதுமே முக்கிய பங்கு வகித்துள்ளது. இப்போதெல்லாம் கர்நாடகா புத்தொழில் நிறுவனங்களுக்கு பெயர் பெற்றுள்ளது. ஒரு வகையில் இந்த பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. பாபுராவ் புஸல்கர் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய ஆலையை இங்கு நிறுவினார். அப்போதிலிருந்து பெலகாவி, பல்வேறு தொழில்களின் புகலிடமாக இருந்து வருகிறது.

சகோதர, சகோதரிகளே, இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் மற்றும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் பெலகாவி-ன் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இன்று இந்தப் பகுதியில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பரிசு கிடைத்துள்ளது. பிரதமரின் கிசான் நிதி திட்டத்தின் மற்றொரு தவணையாக 16,000 கோடி ரூபாய், நாட்டில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 80- 85% சிறிய ரக விவசாயிகள் உள்ளனர். பாஜக அரசு இது போன்ற சிறு விவசாயிகளுக்கு தான் முன்னுரிமை அளித்து வருகிறது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி, சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

2014-ஆம் ஆண்டு முதல் வேளாண் துறையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நோக்கி நாடு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. பாஜக அரசு, நவீனமயமாக்கலுடன் வேளாண்மையை இணைத்து, எதிர்காலத்திற்கு ஏதுவான விவசாயத்தை உருவாக்கி வருகிறது. 2014-ஆம் ஆண்டில் வேளாண் துறைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 1.25 லட்சம் கோடிக்கும் மேலானதாகும். அதாவது சுமார் ஐந்து மடங்கு கூடுதல். விளைப் பொருட்களின் சேமிப்பு, விவசாய செலவைக் குறைப்பது மற்றும் சிறு விவசாயிகளை சீர்படுத்துவது ஆகியவை தற்போதைய காலத்தின் கட்டாயம். அதனால்தான் புதிய சேமிப்பு வசதிகளை உருவாக்குவதற்காக ஏராளமான தொகை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அன்பை வழங்கிய பெலகாவி, கர்நாடக மக்களை தலை வணங்கி எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்.பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

 AP/RB/KPG

 

 

 


(Release ID: 1903882) Visitor Counter : 119