எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில் புரிதலை எளிதாக்கும் நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றால் மின்துறையில் முதலீடுகள் அதிகரிக்கின்றன: மத்திய மின்துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங்

Posted On: 02 MAR 2023 2:37PM by PIB Chennai

தொழில் புரிதலை எளிதாக்கும் நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றால் மின்துறையில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன என்று மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக திரு ஜிஷ்ணு பரூவா இன்று பொறுப்பேற்றார். புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய திரு ஆர்.கே.சிங் அசாம் மாநில மின் விநியோக நிறுவனத்தின் தலைவராகவும், அசாம் தலைமைச் செயலாளராகவும் திரு ஜிஷ்ணு பரூவா சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாகக் கூறினார்.

தற்போது நாட்டின் மின் உற்பத்தி போதுமான அளவு உள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும், பொருளாதாரம் வளரும்போது மின் தேவை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அரசின் நடவடிக்கைகள் காரணமாக மின்துறையில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பதாகவும் திரு ஆர்.கே.சிங் கூறினார். இந்நிகழ்ச்சியில் மத்திய மின்துறை செயலாளர் திரு அலோக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

***

AP/PLM/SG/KPG

 


(Release ID: 1903693)