பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லெஃப்டினன்ட் ஜெனரல் எம் வி சுசீந்திர குமார் ராணுவத் துணைத் தலைமை தளபதியாக பொறுப்பேற்றார்

Posted On: 01 MAR 2023 2:13PM by PIB Chennai

லெஃப்டினன்ட் ஜெனரல் எம் வி சுசீந்திர குமார் ராணுவத் துணைத் தலைமை தளபதியாக 2023, மார்ச் 1 அன்று பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இப்பொறுப்பில் வகித்த லெஃப்டினன்ட் ஜெனரல் பி எஸ் ராஜு ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்ட தென்மேற்குப் படைப்பிரிவின் (சப்த சக்தி) தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து,  திரு சுசீந்திர குமார் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்பு திரு எம்வி சுசீந்திர குமார் ராணுவத் தலைமையகத்தில் துணைத் தளபதியாக பொறுப்பு வகித்து வந்தார்.  பிஜப்பூர்  சைனிக் பள்ளி மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற அவர், 1985-ம் ஆண்டு அசாம் படைப்பிரிவில் பணியைத் தொடங்கினார்.  ராணுவத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள அவர், உளவுப் பிரிவு, செயல்பாடுகள், படைகள் கட்டமைப்பு, தளவாடங்கள் செயல்பாட்டுப்பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்டவற்றில் அனுபவம் பெற்றவர் ஆவார். 

                                                *** 

AP/PLM/RJ/KPG

 


(Release ID: 1903397) Visitor Counter : 192