சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான பசுமை உத்தி பங்களிப்பு, ஒட்டு மொத்த உலகிற்கே வழிகாட்டுதலாக அமையும்: மத்திய அமைச்சர் திரு. பூபேந்திர யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2023 11:57AM by PIB Chennai

இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான பசுமை உத்தி பங்களிப்பு, ஒட்டு மொத்த உலகிற்கே வழிகாட்டுதலாக அமையும் என சுற்றுச்சூழல், வனம், மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் திரு. பூபேந்திர யாதவ் கூறியுள்ளார்.

 “இந்தியா-டென்மார்க்: பசுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு கூட்டாளர்கள்” மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் திரு. பூபேந்திர யாதவ், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற மெய்நிகர் மாநாட்டில் டென்மார்க் பிரதமர் மேன்மைமிக்க திருமதி மீட்டி பெடரிக்சென் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து பசுமை மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினர். இந்த மாநாட்டில்  “பசுமை உத்தி பங்களிப்பு நடவடிக்கை” தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆன் ஆண்டு மே மாதத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி டென்மார்க் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டபோது, இரு நாடுகளும் இணைந்து பசுமை உத்தி பங்களிப்பு கூட்டு நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் விதமாக பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்றவைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான பசுமை கூட்டு நடவடிக்கை, நட்புறவு நாடுகள் மத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது என்றார்.

பாரிஸ் உடன்படிக்கையை சிறந்த முறையில் செயல்படுத்த இந்தியாவும், டென்மார்க்கும் பருவநிலை மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் முக்கிய இலக்குகளை நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது என்றார். நிலையற்ற உற்பத்தி மற்றும் பயன்பாடு சார்ந்த நடவடிக்கைகள் மீது உடனடிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் சம்மந்தமான சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

                                                    ***

AP/GS/JJ/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1903056) வருகையாளர் எண்ணிக்கை : 164
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Telugu