சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

உத்தரப்பிரதேசத்தின் பல்லியாவில் ரூ 6,500 கோடி மதிப்பீட்டிலான 7 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்

Posted On: 27 FEB 2023 3:21PM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தின் பல்லியாவில் உள்ள சித்படா கிராமத்தில் ரூ 6,500 கோடி மதிப்பீட்டிலான 7 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய தரைவழிப்போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இன்று (27.02.2023) தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு. கட்கரி, பல்லியா இணைப்பு விரைவுச்சாலை மூலம் லக்னோவிலிருந்து புர்வாஞ்சல் விரைவுச்சாலை வழியாக பாட்னாவிற்கு நான்கரை மணி நேரத்தில் அடையமுடியும் என்றார். பசுமை நெடுஞ்சாலைத்திட்டத்தின் மூலம் கிழக்கு உத்தரப்பிரதேச மாநில பகுதிகளான சப்ரா, பாட்னா, பீகாரில் உள்ள பக்சர் போன்ற பகுதிகளை இணைக்க முடியும் என்றார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும்பொழுது பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்றார்.

 

AP/GS/JJ/KRS  

***

 



(Release ID: 1902855) Visitor Counter : 101