பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் செயல்படும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், நடைபெற இருக்கும் ஜி20 செயல்பாட்டுக் குழு கூட்டத்தின் தீர்மானத்தை வலிமை பெறச் செய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
Posted On:
27 FEB 2023 2:00PM by PIB Chennai
ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் செயல்படும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக, ஹரியானாவின் குருகிராமில் வரும் மார்ச் 1ந் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஜி20 ஊழலுக்கு எதிரான முதல் செயல்பாட்டுக் குழு கூட்டத்தின் தீர்மானத்தை வலிமை பெறச் செய்ய இருப்பதாக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன் எப்போதும் இல்லாத பொருளாதார, புவி அறிவியல், கால நிலை சவால்களுக்கு மத்தியில் ஜி20 இந்தியத் தலைமைத்துவம் பெற்றிருக்கிறது. உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ள போது, சர்வதேச நிதி ஆணையம் மற்றும் இதர உலக நிறுவனங்கள், இந்தியா பிரகாசமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு-தெற்கு பிரிவுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியா முக்கிய பங்காற்றும். ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் இந்தியா செயல்படும்.
ஜி20 இந்தியத் தலைமைத்துவத்தின் கருப்பொருள் “வசுதைவ குடும்பகம்-ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” ஆகும். ஜி20 இந்திய தலைமைத்துவம் பிரதமர் வழிகாட்டுதலின்படி, பணியாளர் மற்றும் பயிற்ச்சித்துறை ஊழலுக்கு எதிரான முதல் செயல்பாட்டுக் குழு கூட்டத்தை நடத்துகிறது.
குருகிராமில் நடைபெறும் இந்த மூன்று நாள் நிகழ்வில் 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 90 பிரதிநிதிகள், அழைக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 பிரதிநிதிகள், 9 சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சர்வதேச அளவில் ஊழலுக்கு எதிரான செயல்முறை அமைப்பின் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வர். மேலும் பொருளாதார குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை பின்தொடர்ந்து, வேகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வெளிநாட்டில் உள்ள அவர்களுடைய சொத்துக்களை இந்திய சட்ட எல்லைகளுக்கு உட்பட்ட வகையில் கொண்டுவருவது போன்றவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.
***
AP/GS/JJ/KRS
(Release ID: 1902833)
Visitor Counter : 195