அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சொத்துக்களையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதற்காக மத்திய அரசு


தொழில்சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங்

Posted On: 26 FEB 2023 4:39PM by PIB Chennai

சொத்துக்களையும், வேலை வாய்ப்புகளையும்  உருவாக்குவதற்காக மத்திய அரசு தொழில்சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாக  மத்திய  அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

 

புதுதில்லியில் உள்ள என்ஐஐ-யின் 37-வது நிறுவன தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,  ஸ்டார்ட்-அப்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தொழில்துறைக்கு உண்டு என்றார். நாட்டில் புத்தாக்கங்களின் சூழலை உருவாக்குவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதால், அதற்குநிதி ஒதுக்கீடு தடையாக இருக்காது என்று கூறினார்.

தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைக்கு இந்தியாவின் கொரோனா தடுப்பூசி நிலைப்பாடு, மருந்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களை ஒருங்கிணைத்ததற்கு உதாரணமாகத் திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு, தொழில்துறையை முன்னேற்ற தனது அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதி அளித்தார். 

 இந்தியா விரைவில் உலகளாவிய உயிர்- உற்பத்தி கேந்திரமாக மாறும் எனவும், 2025ம் ஆண்டிற்குள், உயிர்- உற்பத்தி நாடுகளில், முதல் 5 முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

விடுதலையின் அமிருதக் காலத்தில், இந்தியப் பொருளாதாரத்தில், உயிர்- தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்காற்றும் எனவும், இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளில் உயிர்-தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 100 மடங்காக  அதிகரித்திருக்கிறது என்றார். அதாவது 2014ம் ஆண்டு, 52 ஆக இருந்து ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 2022ம் ஆண்டு 5300-ஆக உயர்ந்ததையும்  மத்திய இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உயிர்-தொழில்நுட்பத்துறை  செயலாளர் டாக்டர் ராஜேஷ்  கோகலே, ஐஐஎம் இயக்குநர் பேராசிரியர் ரிஷிகேஷ டி. கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

***

SRI / ES / DL



(Release ID: 1902617) Visitor Counter : 166