கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பஞ்சாரா சமூகத்தின் மதத்தலைவர் சந்த் சேவாலால் மகாராஜின் 284-வது பிறந்தநாள் விழா: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா கலந்து கொள்ளவிருக்கிறார்

Posted On: 26 FEB 2023 10:12AM by PIB Chennai

பஞ்சாரா சமூகத்தின் ஆன்மீக மற்றும் மதத் தலைவரான சந்த் சேவாலால் மகாராஜின் 284-வது பிறந்தநாளை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் முதன் முறையாக விமர்சையாகக் கொண்டாடுகிறது.  மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதோடு அவருடன் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகியும் பங்கேற்பார். மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அமைச்சர் திரு சஞ்சய் ரத்தோட், பாஜக மூத்த தலைவர் திரு மஞ்சிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோரும் 27. 02.23 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார்கள்.

 

கர்நாடகாவின் கலபுரகி தொகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும், புதுதில்லியின் சந்த் சேவாலால் மகாராஜ் அறக்கட்டளையின் உறுப்பினருமான டாக்டர் உமேஷ் ஜாதவ், கடந்த  மூன்று ஆண்டுகளாக இந்த விழாவை புதுதில்லியில் கொண்டாடி வருவதோடு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பஞ்சாரா சமூகத்தினர் இதில் பங்கேற்று வருகின்றனர்.

 

இந்த ஆண்டும் நாடு முழுவதும் உள்ள பஞ்சாரா சமூகத்தினர் இந்த பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தில்லி வர உள்ளனர். கர்நாடகாவில் இருந்து இயங்கும் சிறப்பு ரயிலில் கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2,500 பேர் தில்லி வந்துள்ளனர். துவக்க விழாவுடன் கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதியும், உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கலந்து கொள்ளும் விழா பிப்ரவரி 27, காலை 11 மணிக்கும் நடைபெறும்.

***

SRI / RB / DL(Release ID: 1902498) Visitor Counter : 108