குடியரசுத் தலைவர் செயலகம்

தில்லி பல்கலைக்கழகத்தின் 99வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்பு

Posted On: 25 FEB 2023 1:41PM by PIB Chennai

தில்லி பல்கலைக்கழகத்தின் 99வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தில்லி பல்கலைக்கழகம் இந்தியாவை அதன் அனைத்து செழுமையிலும் பன்முகத்தன்மையிலும் பிரதிபலிக்கிறது என்று கூறலாம். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்து விளங்கும் ஒவ்வொரு பகுதியிலும் தில்லி பல்கலைக்கழகத்தின் ஒரு அம்சம்  உள்ளது என்றும் கூறலாம். இருப்பினும், எந்த நிறுவனமும் அதற்கு கிடைத்துள்ள பெருமையினால் தனது வளர்ச்சி பணியை நிறுத்திவிட முடியாது. இன்றைய வேகமான மாற்றங்களின் உலகில், ஒரு நிறுவனம் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தில்லி பல்கலைக்கழக சமூகம், நாட்டில் உள்ள பிற பல்கலைக்கழகங்களைச் சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்வதற்குக் கடமைப்பட்டிருப்பதாக உணர வேண்டும், அதன் மூலம், உலக அளவில் ஒப்பிடக்கூடிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒரு இடத்தைப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அனைத்து மொழிகளையும் கலாச்சாரங்களையும் நாம் மதிக்க வேண்டும்,  வரவேற்க வேண்டும், ஆனால் எப்போதும் நமது வேர்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று அவர்  கூறினார். புத்துணர்ச்சி மற்றும் படைப்பாற்றல் வேர்களில் இருந்து வருகிறது. இந்திய மண்ணுடன் இணைந்திருக்கும் நிலையில், உலகில் கிடைக்கும் சிறந்த அறிவைப் பெறுவதற்கு காந்தியடிகளின் அறிவுரைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு தலைவர், தமது கிராமத்திலிருந்து கல்விக்காக நகரத்திற்குச் சென்ற  முதல் பெண் தாம்தான்  என்று கூறினார். அவர்களின் வகுப்புத் தோழர்களிலும், இதுபோன்ற பல மாணவர்கள் இருக்கலாம், அவர்களின் குடும்பம் அல்லது கிராமத்தைச் சேர்ந்த யாரும் அவர்களுக்கு முன் பல்கலைக்கழக அளவிலான கல்வியைப் பெற முடியாது. அத்தகைய மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற மிகுந்த ஆர்வத்துடன் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்கள். சில சமயம் 'தாழ்வு மனப்பான்மைக்கு' பலியாகின்றனர். இது எந்த உணர்வுள்ள சமூகத்திலும் நடக்கக்கூடாது. இத்தகைய முதல் தலைமுறைப் பல்கலைக்கழக மாணவர்களை ஊக்கப்படுத்துவது ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்களின் பொறுப்பாகும் என்றார்.

பெண் மாணவர்களுக்கான சுத்தமான கழிவறைகள், உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்கள், உண்மையான தரமான கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் போன்ற சில அடிப்படை விஷயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டுமென குடியரசு தலைவர் கேட்டுக்கொண்டார்.

வளர்ச்சி  மற்றும் நாகரீகம் என்ற நுகர்வோர் கருத்தாக்கத்தின் காரணமாக, மாசுபாடு, பருவநிலை மாற்றம், வாழ்க்கை முறை நோய்கள் போன்ற சவால்கள் மிகவும் வலிமையான வடிவத்தை எடுத்து வருவதாக குடியரசு கூறினார். நமது கடந்த தலைமுறையினர் பல நல்ல விஷயங்களைச் செய்திருந்தாலும் சில தவறுகளையும் செய்துள்ளனர். நல்ல விஷயங்களை முன்னெடுத்துச் செல்லவும், தவறுகளை களையவும் இளம் தலைமுறையினரை வலியுறுத்தினார்.

சிறந்த மனிதனை உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாகும் என குடியரசு தலைவர்  தெரிவித்தார். வாழ்க்கையில் பெரியவராக இருப்பது நல்லது ஆனால் நல்ல மனிதனாக இருப்பது நல்லது. செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கையை கண்டுபிடிப்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் நல்ல சிந்தனையுடன் வாழ்க்கையில் நல்வாழ்வைத் தேடுவது இன்னும் முக்கியமானது. புதிய இந்தியாவையும் புதிய உலகத்தையும் உருவாக்க புதிய கனவு காணவும், பெரிய கனவு காணவும் மாணவர்களை அவர் வலியுறுத்தினார்.

***

SRI / PKV / DL



(Release ID: 1902298) Visitor Counter : 148