பாதுகாப்பு அமைச்சகம்
புதுமைத்துவத்துடன் கூடிய புதிய தொழில்நுட்ப மேம்பாட்டு உதவியுடன் புதிய நிறுவனங்களை அமைக்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
Posted On:
24 FEB 2023 12:18PM by PIB Chennai
புதுமைத்துவத்துடன் கூடிய புதிய தொழில்நுட்ப மேம்பாட்டு உதவியுடன் புதிய நிறுவனங்களை அமைக்க வேண்டும் என்று மேற்கு வங்கத்தின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இளைய சமுதாயத்தினரை வலியுறுத்திப் பேசினார். இதன் மூலமே மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து இந்தியாவை வலிமைமிக்க தற்சார்புத் தன்மையுடன் உருவாக்க முடியும் என்றார். குருதேவ் ரவீந்திரநாத் தாகூரிடமிருந்து உத்வேகத்தைப் பெற்று நாட்டை முன்னேற்ற வளர்ச்சிப்படிகளில் தீர்மானத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று திரு.ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
மாணவர்கள் தங்களது சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி குழுவாக செயல்பட்டு, வாழ்க்கையில் வெற்றி-தோல்விகள் என்ற நிலையிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கும்போது கவனச் சிதறல் இல்லாமல் சீரான நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருக்க வேண்டும் என்றும், நற்பண்புகளை வளர்த்து அறிவாற்றல் மற்றும் நிதி ஆதாரங்களுக்கு சமபங்கு அளவிலான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். இந்தியாவின் வளர்ச்சிப்பாதை இளைஞர் மூலமாகவே செல்கிறது என்றும், நீங்கள் எவ்வளவு வலிமையாக இருக்கின்றீர்களோ அதே அளவிற்கு நமது நாடும் வலிமை பெறும் என்றும் அவர் கூறினார்.
விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் நீங்கள் பெற்ற ஆற்றலின் வெளிப்பாட்டை எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கெல்லாம் பயன்படுத்துவது உங்களுடைய நெறிமுறை கடமையாகும். விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் என்பது குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் தத்துவ தலைமையின் வடிவமாக உள்ளது. அதன் மூலம் அவருடைய அறிவாற்றல் மற்றும் ஞானம் போன்றவற்றை இணைந்தப் பகுதியாக உள்ளது என்றார். இந்திய தேசிய வாதம் என்பது கலாச்சாரம் அடிப்படையில் உருவானதே தவிர எல்லைக்கோடுகளால் நிர்ணயம் செய்ய முடியாது. மக்கள் நல்வாழ்வே முக்கிய நோக்கமாகும். தாகூரின் தொலைநோக்குப் பார்வை தொழில்துறை மேம்பாடு மற்றும் நவீன அறிவியல் & தொழில்நுட்ப வளர்ச்சி மீதே இருந்தது என்று கூறினார்.
***
AP/GS/RR/KRS
(Release ID: 1902074)
Visitor Counter : 161