வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை வைரங்களை உருவாக்குவதற்கான இயந்திரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான 5 ஆண்டு ஆராய்ச்சி ஆய்வுக்கான மானியம் சென்னை ஐஐடிக்கு வழங்கப்படுகிறது

प्रविष्टि तिथि: 23 FEB 2023 4:04PM by PIB Chennai

செயற்கை வைரங்களை உருவாக்குவதற்கான இயந்திரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான 5 ஆண்டு ஆராய்ச்சி ஆய்வுக்கா மானியம் சென்னை ஐஐடிக்கு வழங்கப்படுகிறது. மத்திய பட்ஜெட் 2023-24 ல் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை ஐஐடியில் செயற்கை வைரங்களுக்கான மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கென அடுத்த 5 ஆண்டுகளுக்கு 242.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகத் துறை செயலாளர் திரு. சுனில் பரத்வால் தலைமையிலான திட்ட மதிப்பீட்டுக் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதற்கு மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த ஆய்வு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் தொழில்நுட்பங்களை வழங்குவதுடன் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும். செயற்கை வைரங்களின் ஏற்றுமதியை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கும் இது முக்கியப் பங்காற்றும். நாட்டின் ரத்தினக்கற்கள் மற்றும் நகைத்துறை ஒட்டுமொத்தப் பொருட்கள் ஏற்றுமதியின் 9 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

***

AP/PLM/SG/KRS


(रिलीज़ आईडी: 1901853) आगंतुक पटल : 312
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Kannada