அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜி20 தொடர்பான அறிவியல் கூட்டங்கள் ஏற்பாட்டிற்காக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் உயர்நிலை கூட்டு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
Posted On:
23 FEB 2023 4:00PM by PIB Chennai
ஜி20 தொடர்பான அறிவியல் கூட்டங்கள் ஏற்பாட்டிற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் உயர்நிலை கூட்டு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர். அஜய் குமார் சூட், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், சிஎஸ்ஐஆர், புவி அறிவியல், விண்வெளி மற்றும் அணுசக்தி ஆகிய 6 அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள லீலா ஹோட்டலில் மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ள முதலாவது ஊழல் எதிர்ப்பு பணிக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஜி20 இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் சுமார் 40 கூட்டத்தொடர்கள் இதில் நடைபெற உள்ளன.

(Release ID: 1901711)
***
AP/IR/JJ/KRS
(Release ID: 1901761)