கலாசாரத்துறை அமைச்சகம்
முதலாவது ஜி20 கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டம் மத்தியப்பிரதேச மாநிலம் கஜூராஹோவில் நாளை தொடங்குகிறது.
Posted On:
21 FEB 2023 5:18PM by PIB Chennai
முதலாவது ஜி20 கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டம் மத்தியப்பிரதேச மாநிலம் கஜூராஹோவில் நாளை தொடங்குகிறது. இக்கூட்டம் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி 25-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
மத்திய கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. ஜி.கிஷன் ரெட்டி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், கலாச்சாரத் துறை இணை அமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி ஆகியோர் மஹாராஜா சத்ரஸல் மாநாட்டு மையத்தில் தீர்வு: பொக்கிஷங்களை திரும்ப பெறுதல் என்ற கண்காட்சியை நாளை தொடங்கிவைக்க உள்ளனர்.
கஜூராஹோ விமான நிலையத்தில் பிரதநிதிகள் பதாய், ராய் ஆகிய நாட்டுப்புறத் கலைகளுடன் வரவேற்கப்படுவார்கள்.
இக்கூட்டத்தின முதல்நாளில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ஐ கொண்டாடும் வகையில் சிறுதானிய மனிதர் என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ திரு நெக் ராம் அழைக்கப்பட்டுள்ளார்.
இக்கூட்டத்தை தொடர்ந்து கஜூராஹோ நடனம் உட்பட கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 125க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
உறுப்புநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்பு பிரதிநிதிகளுடன் நான்கு பணிக்குழு அமர்வுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
(Release ID: 1901120)
AP/IR /JJ/KRS
(Release ID: 1901172)
Visitor Counter : 213