நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023 உள்நாட்டு வெளிச்சந்தை விற்பனை முறையின் கீழ் 50 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விடுவிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

Posted On: 21 FEB 2023 4:04PM by PIB Chennai

இந்திய உணவுக்கழகம் மூலம் உள்நாட்டு வெளி்ச்சந்தை விற்பனை முறையின் கீழ் 20 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை கூடுதலாக விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போல கோதுமை மற்றும் உற்பத்திப் பொருட்களை  மாவு மில்கள் தனியார் வர்த்தகர்கள், உற்பத்தியாளர்களுக்கு மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கையிருப்பு விலையில் குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் 20 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விடுவிப்பதன் மூலம் கோதுமை மற்றும் கோதுமை பொருட்களின் சந்தை விலை குறைந்து நுகர்வோர் பயனடைய வாய்ப்பு ஏற்படும்.

உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலர், இந்திய உணவுக்கழகம் மற்றும் மாவு மில் சங்கத்தினரின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினர். பணவீக்கத்தை குறைக்கவும், வெளிச்சந்தையில் விலையை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 10-ந் தேதி கோதுமை விலை கிலோவுக்கு ரூ. 23.50-லிருந்து, ரூ. 21.50 ஆக குறைக்கப்பட்டது. கோதுமை, ஆட்டா, ரவை ஆகியவற்றின் விலைகளை குறைக்க இதன் மூலம் வகைசெய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இருப்பு விலை குறைப்பு நடவடிக்கை 31.03.2023 வரை நடைமுறையில் இருக்கும்.

 ***

AP/PKV/AG/KRS


(Release ID: 1901140) Visitor Counter : 148