தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 14.93 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

प्रविष्टि तिथि: 20 FEB 2023 5:09PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உறுப்பினர்களின்  எண்ணிக்கை 14.93 லட்சமாக இருந்தது என்று தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 32,635 உறுப்பினர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டனர்.

14.93 லட்சம் உறுப்பினர்களில் 8.02 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு பெற்றுள்ளனர். புதிதாக இணைந்த உறுப்பினர்களில் அதிகபட்சமாக 18 வயது முதல் 21 வயது உடையவர்களில் 2.39 லட்சம் உறுப்பினர்களும் 22 வயது முதல் 25 வயது உடையவர்களில் 2.08 உறுப்பினர்களும் ஆவார்கள்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1900764

                             ***

AP/IR/JJ/PK 

 


(रिलीज़ आईडी: 1900831) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi