பிரதமர் அலுவலகம்
புதுதில்லியில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் உலகளாவிய வர்த்தக உச்சிமாநாடு 2023 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
17 FEB 2023 9:58PM by PIB Chennai
டைம்ஸ் குழுமத்தின் திரு சமீர் ஜெயின் மற்றும் திரு வினீத் ஜெயின் அவர்களே, உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரமுகர்களே, தொழில்துறை நண்பர்களே, தலைமை நிர்வாக அதிகாரிகளே, கல்வியாளர்களே, ஊடக நண்பர்களே, தாய்மார்களே, அன்பர்களே!
இதற்கு முன் இந்த மாநாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு நான் கலந்து கொண்டேன். இந்த மூன்றாண்டு காலங்களில் உலகம் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கொரோனா, போர், இயற்கை பேரழிவு என பல்வேறு சவால்கள் உலகை புரட்டிப் போட்டாலும், இந்தியாவும் அதன் மக்களும் இதுவரை இல்லாத வலிமையை வெளிப்படுத்தினார்கள். பேரிடர்களை வாய்ப்புகளாக எவ்வாறு மாற்றுவது என்பதை உலகிற்கு இந்தியா தெளிவாக உணர்த்தியுள்ளது.
ஒரு சிலர் வறுமையை ஒழிப்பது பற்றி பேசுவார்கள். உண்மையிலேயே இதற்கு முன்பு ஏழைகள் நாட்டிற்கு பாரமாகவே கருதப்பட்டு வந்தனர். மாறாக எங்களது ஆட்சிக் காலத்தில் ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. இதன் காரணமாக தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிக்கக்கூடும். இதற்கு சிறந்த உதாரணம் நேரடி பலன் பரிவர்த்தனை முன்முயற்சி. பல்வேறு நலத்திட்டங்களில் இந்த முறையின் கீழ் 28 லட்சம் கோடி ரூபாயை அரசு வெற்றிகரமாக பரிமாற்றம் செய்துள்ளது.
நண்பர்களே,
அனைத்து இந்தியர்களுக்கும் கழிவறை வசதி வழங்கப்படும் போது மட்டுமே நாடு வளர்ச்சியின் புதிய உயரத்திற்கு செல்லும் என்று நேரு அவர்கள் ஒருமுறை கூறினார். 2014 ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்த போது கிராமப்புற பகுதிகளில் துப்புரவு வசதி 40%க்கும் குறைவாகவே இருந்தது. குறுகிய காலத்தில் 10 கோடி கழிவறைகளை நாங்கள் கட்டி தந்ததோடு தூய்மை இந்தியா திட்டத்தையும் தொடங்கி வைத்தோம். இன்று இந்த எண்ணிக்கை நாடு முழுவதும் 100சதவீதத்தை எட்டியுள்ளது. அதேபோல வறுமையும், சாலை, குடிநீர், பள்ளி, மின்சாரம், மருத்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற வசதிகள் இல்லாமலும் இருந்த மாவட்டங்களை நாங்கள் தேர்வு செய்து, அவற்றை முன்னேற விரும்பும் மாவட்டங்களாக அறிவித்து அங்கு நிலைமையை மாற்றி அமைக்க கடுமையாக போராடி வருகிறோம்.
ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற ஜி20 அமைப்பிற்கு இந்தியா வழங்கியுள்ள கருப்பொருள் உலகின் பல்வேறு சவால்களுக்கு தீர்வைக் கொண்டுள்ளது. அனைவரின் ஒத்துழைப்போடு இந்தியா தனது இலக்குகளை விரைவாக அடையும். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் இயன்றவரை அனைவரும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன். அவ்வாறு நீங்கள் இணையும் போது உங்களது வளர்ச்சிக்கு இந்தியா உறுதி அளிக்கும். அதுதான் இன்றைய இந்தியாவின் வலிமை. உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
(Release ID: 1900293)
SRI/RB/RR
(Release ID: 1900695)
Visitor Counter : 173
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam