மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் இருந்து மகாராஷ்டிரா வரை சாகர் பரிக்ரமா மூன்றாம் கட்ட திட்டத்தை மீன்வளத் துறை நடத்துகிறது

Posted On: 18 FEB 2023 6:20PM by PIB Chennai

சாகர் பரிக்ரமா என்பது 75வது விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் உணர்வாக அனைத்து மீனவர்கள், மீன் விவசாயிகள், ஆர்வமுள்ள  பங்குதாரர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கடலோரப் பகுதி முழுவதும் திட்டமிடப்பட்ட ஒரு பரிணாமப் பயணமாகும். இது மத்திய  அரசின் முன்முயற்சியாகும்.  இது மீனவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டதுடன், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு மீன்பிடித் திட்டங்கள் மூலம் அவர்களின் பொருளாதார மேம்பாட்டை எளிதாக்குகிறது.

மூன்றாம் கட்ட ‘சாகர் பரிக்ரமா’ நாளை  குஜராத்தின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து தொடங்கும்.  அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியை நோக்கிப் பயணிக்கும்.  பிப்ரவரி 20-21 இல் வடக்கு மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகளான சத்பதி, வசாய், வெர்சோவா, சாசன் டாக் மற்றும் மும்பையின் பிற பகுதிகளை உள்ளடக்கிய பயணமாக இருக்கும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, ராய்காட், கிரேட்டர் மும்பை, ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய 5 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 720 கிமீ கடற்கரை உள்ளது. மீனவ மக்கள், விற்பனையாளர்கள் மற்றும் தொழில்கள் பொருளாதார மதிப்பில் குறிப்பாக ஏற்றுமதியில் மீன்வளத் துறையின் வளர்ச்சியில் நேரடிப் பங்கைக் கொண்டுள்ளன.

மீன்வளத் துறை, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், குஜராத் அரசின் மீன்வளத் துறை, மீன்வள ஆணையர், மகாராஷ்டிரா அரசு, இந்திய கடலோரக் காவல்படை, இந்திய மீன்வள ஆய்வு , குஜராத் கடல்சார் வாரியம், மீனவர் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.  மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா,   மீன்வளத் துறை,  தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், குஜராத் அரசு, மகாராஷ்டிரா அரசு, இந்திய மீன்வள ஆய்வு, இந்திய கடலோரக் காவல்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள்.

நிகழ்வின் போது, முற்போக்கு மீனவர்கள், குறிப்பாக கடலோர மீனவர்கள், பிற பகுதி மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பாளர்கள், இளம் மீன்பிடித் தொழில்முனைவோர் போன்றவர்களுக்கு பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம், கிசான் கடன் அட்டைகள் & மாநில திட்டம் தொடர்பான சான்றிதழ்கள்/அனுமதிகள் வழங்கப்படும்.

சாகர் பரிக்ரமாவின் பயணம், நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்காக கடல் மீன் வளங்களைப் பயன்படுத்துதல், கடலோர மீனவச் சமூகங்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு, மீனவச் சமூகங்களின் இடைவெளிகளைக் குறைப்பதற்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே நிலையான சமநிலையை மையமாகக் கொண்டதாகும். மீனவக் கிராமங்களின் மேம்பாடு, சுற்றுச்சூழல் அணுகுமுறை மூலம் நிலையான மற்றும் பொறுப்பான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கும் தளங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை இது உள்ளடக்கியதாகும்.

சாகர் பரிக்ரமா திட்டம், குஜராத், டையூ, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் & நிக்கோபார் ஆகிய இடங்களிலிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட கடல் வழியாக அனைத்து கடலோர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் கொண்டாடப்படும். லட்சத்தீவுகள் கடலோர மீனவர்களின் பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காக இந்த இடங்களில் உள்ள மீனவர்கள், மீனவச் சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்துகிறது.

இந்தியா 8118 கிமீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது, இது 9 கடல்சார் மாநிலங்கள் & 4 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது. 2.8 மில்லியன் கடலோர மீனவர்களுக்கு வாழ்வாதார ஆதரவை வழங்குகிறது. உலக மீன் உற்பத்தியில் இந்தியா 8% பங்களிப்பதோடு, உலகின் 3வது பெரிய மீன் உற்பத்தியாளராகவும் உள்ளது. நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 162.48 லட்சம் டன்கள் ஆகும், இதில் 121.21 லட்சம் டன்கள் உள்நாட்டிலிருந்தும், 41.27 லட்சம் டன்கள் கடலிலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகிறது. மீன்வள ஏற்றுமதியின் மதிப்பு ரூ.57,586.48 கோடியாக உள்ளது. இந்தத் துறையானது  ஒரு நிலையான வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது, இது விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.72% பங்கைக் கொண்டுள்ளதுடன், விவசாய ஏற்றுமதியில் சுமார் 17% பங்களிக்கிறது.

***

AP  / PKV  / DL


(Release ID: 1900387) Visitor Counter : 142