நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் கூடுதல் சமுதாய சேவைகள் மூலம் ரூ.50,000 வருவாய் ஈட்ட முடியும்: மத்திய அரசு

प्रविष्टि तिथि: 16 FEB 2023 5:23PM by PIB Chennai

நாட்டில் சுமார் 40,000 நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்ற சேவைகளை அளிப்பதன் மூலம் ரூ.50,000 வருவாய் ஈட்டி வருவதாக நியாயவிலைக் கடைகளின் மாற்றத்திற்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் திரு சஞ்ஜீவ் சோப்ரா தெரிவித்தார்.

     இம்மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அவர், பொது விநியோக சேவை நடவடிக்கைகளுக்கு அப்பால், மற்றப் பொருட்களை விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன் மூலம் துடிப்புமிக்க, நவீனமான, சாத்தியமிக்க நியாயவிலைக் கடைகளாக மாற்றுமாறு அவர் வலியுறுத்தினார்.  விரைவில் விற்பனையாகக் கூடிய மற்றப் பொருட்களை விற்பனை செய்வதற்கு நியாயவிலைக் கடைகளுக்கு அனுமதி அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை கடிதம் எழுதியுள்ளதாகவும், பல்வேறு மாநிலங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  ஆதார் அங்கீகாரம் மூலம் நாட்டில் எந்தவொரு நியாயவிலைக் கடைகளிலும் பயனாளிகள் உணவு தானியங்களை தற்போது பெறமுடிவதாக அவர் கூறினார்.  ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை முன்னெடுப்பின்கீழ், நாடு முழுவதும் 3.5 கோடிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

     ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 மாதிரி நியாயவிலைக் கடைகளை மாநில அரசுகள் கண்டறிந்து, அங்கு காத்திருப்பு இடங்கள், கண்காணிப்பு கேமராக்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தருமாறு திரு சஞ்ஜீவ் சோப்ரா கேட்டுக்கொண்டார். 

***

SRI/IR/UM/KRS


(रिलीज़ आईडी: 1899901) आगंतुक पटल : 356
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu