நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இரண்டாவது இ- ஏலமுறையில் இந்திய உணவுக் கழகத்தால் ரூ.901 கோடிக்கு 3.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டது

Posted On: 16 FEB 2023 10:38AM by PIB Chennai

2023, பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற இரண்டாவது இ- ஏலமுறையில் இந்திய உணவுக் கழகத்தால் ரூ.901 கோடிக்கு 3.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டது. இதில் 1060-க்கும் அதிகமான ஏலதாரர்கள் பங்கேற்றனர். இந்த ஏலத்தின் போது 15.25 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த ஏலத்தில் 50-100 மெட்ரிக் டன், 100-499 மெட்ரிக் டன், 500-1000 மெட்ரிக் டன் என்ற அளவில் ஏலதாரர்கள் கோதுமையை ஏலம் எடுத்ததால் சிறு மற்றும் நடுத்தர மாவுமில் உரிமையாளர்களும், வர்த்தகர்களும் ஏலத்தில் பங்கேற்றதைக் காட்டுகிறது. 5 ஏலதாரர்கள் மட்டும் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 3000 மெட்ரிக் டன் ஏலம் எடுத்தனர்.

குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.2338.01 என்ற விகிதத்தில்  ஏலம் இருந்ததால் இந்திய உணவுக் கழகத்திற்கு ரூ. 901 கோடி விற்று முதல் கிடைத்தது.

நாட்டில் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் குழு பரிந்துரையின் அடிப்படையில் இ-ஏலமுறையில் கோதுமை விற்கப்படுகிறது. இத்தகைய ஏலமுறை விற்பனை நாடு முழுவதும் 2023, மார்ச் 2-வது வாரம் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும்.

***

(Release ID: 1899720)

SRI/SMB/AG/RR


(Release ID: 1899728) Visitor Counter : 200