எஃகுத்துறை அமைச்சகம்
தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் மூன்றாவது காலாண்டில் சிறந்த உற்பத்தியை பதிவு செய்தது
Posted On:
15 FEB 2023 11:23AM by PIB Chennai
நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இதுவரை இல்லாத அளவில் தனது மிகச் சிறந்த செயல்திறனை தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் பதிவு செய்துள்ளது. நிதியாண்டு 23இன் மூன்றாவது காலாண்டில் 10.66 மில்லியன் டன் உற்பத்தி செய்து இந்த சாதனையை அந்த நிறுவனம் படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களிலேயே முதன்முறையாக அந்த நிறுவனம் ரூ.11,816 கோடி விற்றுமுதலை பதிவு செய்திருப்பதாக பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற நிறுவனத்தின் வாரியக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வரி செலுத்துவதற்கு முன்பு நிறுவனத்தின் லாபம் ஒன்பது மாதங்களில் ரூ. 4351 கோடியாகவும், வரி செலுத்திய பிறகு இந்த தொகை ரூ. 3252 கோடியாகவும் இருந்தது. தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் நிதியாண்டு 23இன் மூன்றாவது காலாண்டில் 10.66 மில்லியன் டன் இரும்பு தாதுக்களை உற்பத்தி செய்து, 9.58 மில்லியன் டன்னை விற்பனை செய்தது. முதல் மூன்று காலாண்டுகளில் 26.69 மில்லியன் டன் இரும்புத் தாதுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, 25.81 மில்லியன் டன் விற்பனையான செய்யப்பட்டன.
இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ. 3.75 ஆக அறிவிக்கப்பட்டது.
இந்த செயல்திறனை எட்டியதற்காக, தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தின் தலைமை மேலாண் இயக்குநர் திரு சுமித் டெப், தனது குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மூலதன செலவு உயர்த்தப்பட்டிருப்பதால் உள்நாட்டு எஃகின் தேவை பெருமளவு உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1899322
***
SRI/BR/RR
(Release ID: 1899382)
Visitor Counter : 189