மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின் முதல் கூட்டத்தின் 2-ம் நாள் நிகழ்வு

Posted On: 14 FEB 2023 5:27PM by PIB Chennai

டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின் முதல் கூட்டத்தின் 2ம் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜி-20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், எட்டு நாடுகளின் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். டிஜிட்டல் பொருளாதாரத்தில், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகள், சைபர் பாதுகாப்பு ஆகியவையே இந்தக் கூட்டத்தின் முக்கிய விவாத அம்சங்களாக இடம்பெற்றிருந்தன. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைச்செயலாளர் திரு சுஷில் பால் அனைவரையும் வரவேற்றார். 

இக்கூட்டத்தில் பேசிய மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளரும், டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின் தலைவருமான அகிலேஷ் குமார் ஷர்மா, மக்கள் அனைவரும் தொழில் நுட்பத்தால் பயன்பெறுவதை உறுதி செய்வதே மத்திய அரசின் குறிக்கோள் என்றார். இதன்படி டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், டிஜிட்டல் பொருளாதாரத்தின் சைபர் பாதுகாப்பின் பங்கு இன்றியமையாதது என்றும், இதற்கு டிஜிட்டல் திறன்கள் பெரிதும் பயன்படும் எனவும் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜி20 நாடுகளின் இந்தியப் பிரதிநிதி திரு அமிதாப்காந்த், பாதுகாப்பு, நல்லாட்சி, சமூகசேவை ஆகியவற்றை உள்ளடக்கிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விளக்கினார். மேலும், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளான ஆதார், கோவின், டிஜிட்டல் லாக்கர் உள்ளிட்டவற்றில் வெற்றிகரமாக செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்தக் கூட்டத்தில் இந்தோனேஷியா மற்றும் பிரேசில் நாடுகளின் உறுப்பினர்களும் உரையாற்றினர்.

-------------

 

AP/ES/RS/GK



(Release ID: 1899203) Visitor Counter : 208