பாதுகாப்பு அமைச்சகம்

இங்கிலாந்து பிரதிநிதிக்குழுவுடன் பாதுகாப்புத்துறை செயலர் சந்திப்பு

Posted On: 14 FEB 2023 9:13AM by PIB Chennai

பாதுகாப்புத்துறை செயலர் திரு கிரிதர் அரமானே, இங்கிலாந்து பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் அமைச்சர்   திரு அலெக்ஸ் சாக்-ஐ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் நேற்று தொடங்கிவைத்த ஏரோ இந்தியா 2023 கண்காட்சிக்கு இடையே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பு வாய்ப்புகள் உட்பட எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்பு விஷயங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.  இங்கிலாந்து அமைச்சருடன் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் திரு அலெக்ஸ் எல்லீஸ் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.

***

(Release ID: 1898992)

SRI/PKV/AG/RR(Release ID: 1899027) Visitor Counter : 152