வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா- பசிஃபிக் பொருளாதார கட்டமைப்பின் 2 முதல் 4 வரையிலான அம்சங்களுக்கு சிறப்பு பேச்சுவார்த்தையை இந்தியா 2023 பிப்ரவரி 8 முதல் 11 வரை புதுதில்லியில் நடத்தியது
Posted On:
13 FEB 2023 3:32PM by PIB Chennai
வளத்திற்கான இந்தியா- பசிஃபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் சிறப்பு பேச்சுவார்த்தையை இந்தியா 2023 பிப்ரவரி 8 முதல் 11 வரை புதுதில்லியில் நடத்தியது. இதில் 2-வது (வழங்கல் தொடர்கள்), 3-வது (தூய்மைப் பொருளாதாரம்), 4-வது (நியாயமான பொருளாதாரம்) ஆகிய அம்சங்சகள் இடம்பெற்றன.
இந்தப் பேச்சு வார்த்தையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, புருனே, ஃபிஜி, இந்தோனேஷியா, ஜப்பான், கொரியா குடியரசு, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 300 அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தச் சிறப்பு சுற்று பேச்சுவார்த்தையை 2023, பிப்ரவரி 8 அன்று இந்தியாவின் வர்த்தகத்துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா-பசிஃபிக் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்கு இந்தியா உறுதிபூண்டு இருப்பதையும், கூடுதலான நிலைத்தன்மை மற்றும் வளமிக்க எதிர்காலத்திற்கு பங்களிப்பு செய்வதையும் வலியுறுத்தினார்.
2023 பிப்ரவரி 10அன்று உறுப்பு நாடுகளிடமிருந்து வருகை தந்த பிரதிநிதிகளுக்கு மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வரவேற்பு அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் தலைமை பேச்சுவார்த்தையாளர்கள், தூதுக்குழுவினர், தூதர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு கோயல், விரைந்து பயன்தரத்தக்க விஷயங்களில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இது அனைத்து உறுப்பினர்களுக்கும் பயன்தரும் என்றும் கூறினார். திறன் கட்டமைப்பு, தொழில்நுட்ப உதவி, நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வது, முதலீடுகள், புதுமைத் திட்டங்கள் போன்றவற்றில் பொதுவான கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
2023 பிப்ரவரி 9 அன்று நடைபெற்ற சிறப்புச் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு இடையே நடைபெற்ற பங்குதாரர்கள் அமர்வில், இந்தியாவுக்கான தலைமை பேச்சுவார்த்தையாளரும், வர்த்தகத் துறை கூடுதல் செயலாளருமான திரு ராஜேஷ் அகர்வால் உரையாற்றினார். இந்தியா - பசிஃபிக் பொருளாதாரக் கட்டமைப்பு, இந்தப் பகுதியில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு விரிவாக்கத்தின் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அதிகப்படுத்தி பொருளாதார ஈடுபாட்டை ஆழப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1898768
***
AP/SMB/RS/GK
(Release ID: 1898896)
Visitor Counter : 188