சுரங்கங்கள் அமைச்சகம்

கடந்த 5 ஆண்டுகளில் 133 கனிமச் சுரங்கங்களை மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டுள்ளன

Posted On: 13 FEB 2023 1:10PM by PIB Chennai

சுரங்கம் மற்றும் கனிம மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957 திருத்தப்பட்டு 12.01.2015 முதல் அமலுக்கு வந்தது. கனிமச்சுரங்கங்கள் ஏலத்தில் அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.   இதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் 133 கனிமச் சுரங்கங்கள் மாநில அரசுகளால் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.  அத்துடன் மத்திய அரசின் ஒப்புதல் அடிப்படையில் வனத்துறை இடங்களில் 16 திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

     சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் தகவல்கள் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் 19,267.47 ஹெக்டேர் வனத்துறை நிலங்கள் சுரங்க நடவடிக்கைகளுக்காக மாற்றப்பட்டுள்ளன.  தமிழகத்தைப் பொறுத்தவரை 16.72 ஹெக்டேர் நிலங்கள் சுரங்கப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

     இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

***  

AP/PLM/UM/RR



(Release ID: 1898740) Visitor Counter : 118