கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய சமஸ்கிருதப் பெருவிழா 2023 மும்பையில் தொடங்கியது, இது 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' நெறிமுறைகளை வெளிப்படுத்தியது

Posted On: 12 FEB 2023 2:18PM by PIB Chennai

தேசிய சமஸ்கிருதப் பெருவிழா  2023-ஐ மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியும், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியும் நேற்று மாலை மும்பை சர்ச்கேட் ஆசாத் மைதானத்தில் தொடங்கிவைத்தனர். இந்தப் பெருவிழா, பிப்ரவரி 11 முதல் 19 வரை கலாச்சாரப்  பரிமாற்றம் மூலம் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்த மத்திய கலாசார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசின் கலாசார விவகாரங்கள், வனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், சுதிர் முங்கந்திவார்,   சுற்றுலா, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு,  அமைச்சர்  மங்கள் பிரபாத் லோதா ஆகியோர் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவில் உரையாற்றிய ஆளுநர், 'ஒரே பாரதம், உன்னத  பாரதத்தின்' நீடித்த செய்தியை தேசிய சமஸ்கிருதப் பெருவிழா தெரிவிக்கிறது. மொழி மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளில் பல வேறுபாடுகள் இருந்தபோதும், இந்தியா ஒன்றுபட்டது மற்றும் ஒன்று என்பதை இது குறிக்கிறது. கும்பமேளா போன்று இந்தப் பெருவிழாவும் உலகப் புகழ்பெற வேண்டும் என்று ஆளுநர்  வாழ்த்தினார்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 முதல், சிறப்பு சுற்றுலாவாக பாபாசாகேப் அம்பேத்கர் வட்டப் பாதை ரயில் இயக்கப்படும் என்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி  அறிவித்தார்.

குடிமக்கள், கலைஞர்கள், கைவினைஞர்கள் உட்பட பார்வையாளர்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட மத்திய அமைச்சர், மும்பை மக்களுக்காக சுமார் 1000 கலைஞர்கள் இந்தப் பெருவிழாவின்போது நிகழ்ச்சிகளை நடத்துவார்கள் என்று கூறினார்.

சுதந்திரப் போராட்டத்தில் மறக்கப்பட்ட மற்றும் அதிகம் அறியப்படாத மாவீரர்கள் என்ற கருப்பொருளுடன்  ஆர்எஸ்எம்  மைதானத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்  தகவல் தொடர்பு அலுவலகம்  அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். பிரபல இசையமைப்பாளர் மோஹித் செளகானின் இசை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 350 நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைஞர்கள் மற்றும் சுமார் 300 உள்ளூர் நாட்டுப்புற கலைஞர்கள், சில திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளி கலைஞர்கள், புகழ்பெற்ற பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் பிரபல நட்சத்திர கலைஞர்கள் தங்களின் கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை மகிழ்விப்பார்கள்.

கலைஞர்கள் தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஏழு மண்டல கலாச்சார மையங்களிலிருந்தும் சுமார் 150 கைவினைஞர்கள் அங்கன் அமைப்பின்  கீழ் நடத்தப்படும் கலை மற்றும் கைவினைப்பொருள் விற்பனை மற்றும் கண்காட்சிக்காக அழைக்கப்படுகிறார்கள், இதற்காக சுமார் 70 அரங்குகள் உள்ளன. மேலும், மகாராஷ்டிரா மாநில கைத்தறித் துறை மற்றும் ஸ்டார்ட்அப்களுக்காக 25 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப்  பெருவிழா 2019 ல் மத்திய பிரதேசத்திலும், 2022 ல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் நடைபெற்றது.  இப்போது மகாராஷ்டிராவில் நடைபெறுகிறது.

***

AP  / SMB  / DL


(Release ID: 1898523) Visitor Counter : 171