மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

ஜி-20 தலைமைத்துவத்தின் முன்னணி நிகழ்வான டிஜிட்டல் திறன் குறித்த முதலாவது சர்வதேச மாநாட்டை திரு அல்கேஷ் குமார் சர்மா தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 11 FEB 2023 3:46PM by PIB Chennai

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு அல்கேஷ் குமார் சர்மா, டிஜிட்டல் திறன்,  திறன் மேம்பாடு மற்றும் மறு-திறன் ஆகியவை வேகமாக மாறிவரும் பொருளாதாரத்தில் பங்களிப்பு செய்பவர்களின்  திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும்,  விரிவுபடுத்தவும் முக்கியமானவை என்று கூறினார்.

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஏற்பாடு செய்த ஜி-20 தலைமைத்துவத்தின்  முன்னணி நிகழ்வான, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் 2023 மற்றும் டிஜிட்டல் திறன் பற்றிய முதலாவது சர்வதேச மாநாட்டை இன்று தொடங்கி வைத்து அவர் கூட்டத்தில் உரையாற்றினார்.

 

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு அல்கேஷ் குமார் சர்மா தனது தொடக்க உரையில், டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு எதிர்காலத்தில் தயாராக உள்ள பணியாளர்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பணியாற்ற தயார் நிலையில் இருக்கும் மக்கள் (குடிமக்கள்) ஆகிய இரண்டும் தேவை என்று கூறினார்.

திறன் மேம்பாடு மற்றும் திறன் ஆகியவற்றில் அபரிமிதமான வளர்ச்சியை பதிவு செய்ததற்காக தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை அவர் பாராட்டி பேசினார். டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப தரமான மனிதவளத்தை உருவாக்கும் சாதனையை நோக்கி இந்த நிறுவனம் தனது உயர்நிலை பயிற்சி மற்றும் திறன் திட்டங்களின் மூலம் அடியெடுத்து வைக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த நாட்டின் கடைசி வாழ்விடத்துடன் இணைக்கும் வகையில் அதிக டிஜிட்டல் இணைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 8 மில்லியன் விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பயிற்சி அளித்ததற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

 

***

PKV / GS / DL


(रिलीज़ आईडी: 1898332) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Kannada