சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனங்களை தற்காலிக பதிவு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களாக மாற்றுவதற்கு வசதியாக நகல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
Posted On:
10 FEB 2023 12:15PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஜிஎஸ்ஆர் 90(இ) நகல் அறிக்கை 2023 பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனங்களை தற்காலிக பதிவு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களாக மாற்றிக் கொள்ளலாம்.
பொதுவாக மாற்றுத் திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப அவர்களது நகர்தலுக்கு பொருத்தமான வகையில் மோட்டார் வாகனங்களை தேர்வு செய்து வாகனப்பதிவு செய்துகொண்டு, பின்னர் தங்களுக்கான பிரத்யேக வசதிகளை வாகனங்களில் ஏற்படுத்திக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இத்தகைய நடைமுறையை கையாள்வதில் உள்ள சிக்கலை தீர்க்க ஏதுவாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தற்போது புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 53-ஏ விதியின்படி, மாற்றுத் திறனாளிகள் முழுமையாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு தற்காலிக முன்பதிவிற்கு விண்ணப்பிக்க முடியும். 53-பி விதியின்படி, இந்த தற்காலிகப் பதிவு 45 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது தொடர்பான ஆலோசனைகளும், கருத்துக்களும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் வரவேற்கப்படுகிறது. அவற்றை அடுத்த 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
***
SMB/ES/UM/RR
(Release ID: 1897913)
Visitor Counter : 181