குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மேற்கு மண்டலத்திற்கு கடனாக ரூ.304.65 கோடிக்கு ஒப்புதலும், உபரி மானியத்தொகை ரூ.100.55 கோடியும் வழங்கப்பட்டது
Posted On:
08 FEB 2023 10:17AM by PIB Chennai
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மேற்கு மண்டலத்திற்கு கடனாக ரூ.304.65 கோடியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தை (கோவா, மகாராஷ்டிரா, குஜராத், டாமன் மற்றும் டையு, தாத்ராநாகர் ஹவேலி) சேர்ந்த 1463 பயனாளிகளுக்கு உபரி மானியத்தொகை ரூ.100.55 கோடியை காதி மற்றும் கிராமப்புற தொழில்துறை ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ்குமார் வழங்கினார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 654 பயனாளிகளுக்கு உபரி மானியத் தொகை ரூ.24.38 கோடி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு மனோஜ்குமார், ‘பிரதமரின் தற்சார்பு இந்தியா கனவை நனவாக்கும் விதமாக பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் சிறப்பான முறையில் பங்காற்றுகிறது. நம்நாட்டில் தொலைதூரப் பகுதிகளில் உள்ள கைவினைக் கலைஞர்களின் வீட்டிற்கே சென்று குறைந்த செலவில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை காதி மற்றும் கிராமப்புற தொழில்துறை மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான சிறந்த பயிற்சி மற்றும் சாதனங்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை உயருகிறது. வளமையான, வலிமையான, தற்சார்பு மிக்க மகிழ்ச்சிகரமான தேசத்தை உருவாக்கும் நோக்கத்தில் பயனாளிகள் செயல்பட்டு, தங்களது சிறிய நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன என்றார்.”
******
AP/GS/UM/GK
(Release ID: 1897328)
Visitor Counter : 155