சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உயிருக்கு ஆபத்தான நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் குறித்த அண்மைத்தகவல்
Posted On:
07 FEB 2023 3:31PM by PIB Chennai
தேசிய சுகாதார இயக்கத்தின், ஒரு பகுதியாக, புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள், பக்கவாத தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குகிறது. இத்திட்டமானது, உள்கட்டமைப்பு, மனித வள மேம்பாடு, சுகாதார மேம்பாடு, விழிப்புணர்வு உருவாக்கம், ஸ்கிரீனிங், ஆரம்பகால நோயறிதல், மேலாண்மை, புற்றுநோய் உட்பட தொற்றாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சரியான அளவிலான சுகாதார வசதிகளை பரிந்துரைப்பதில் கவனம் செலுத்துகிறது. புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள், பக்கவாத தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ், 707 மாவட்ட சுகாதார மருத்துவ மையங்கள், 193 மாவட்ட இதய சிகிச்சை பிரிவுகள், 268 பகல்நேர பராமரிப்பு மையங்கள்,5541 சமூக சுகாதார மையப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பொதுவான புற்றுநோய்களுக்கான தடுப்பு, நோய்க் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல் மக்கள்தொகை அடிப்படையிலான முன்முயற்சி தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் ஒரு பகுதியாக நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முயற்சியின் கீழ், 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், வாய்வழி, மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் ஆகிய மூன்று பொதுவான புற்றுநோய்களுக்கான ஸ்கிரீனிங்கிற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இந்த பொதுவான புற்றுநோய்களை பரிசோதிப்பது ஆயுஷ்மான் பாரத் - உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் கீழ் சேவை வழங்கலின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
ஜனவரி 30, 2023 நிலவரப்படி, 1,56,332 ஆரோக்கிய மையங்கள் செயல்பட்டன, இதில் 1,25,602 துணை சுகாதார நிலைய அளவிலான மையங்களாகும். 23,512 ஆயுஷ்மான் பாரத் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.7,218 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் இன்று மாநிலங்களையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.
***
(Release ID: 1896954)
AP/PKV/GK
(Release ID: 1897016)