உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவுப் பதப்படுத்தும் தொழில்கள், அதன் திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் திறமையான விநியோகச் சங்கிலியுடன் உணவுப் பதப்படுத்துதல் / பாதுகாப்பு உள்கட்டமைப்பை மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகம் வலுப்படுத்த உதவுகிறது

Posted On: 07 FEB 2023 2:20PM by PIB Chennai

உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம், அதன் திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் திறமையான விநியோகச் சங்கிலியுடன் உணவு பதப்படுத்துதல் / பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவுவதுடன்,  அதன் மூலம் உற்பத்தி மற்றும் செயலாக்கத் திறன் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது. 2016-17 முதல், பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் முடிக்கப்பட்ட திட்டங்கள் சுமார் 194 லட்சம் மெட்ரிக் டன் பாதுகாப்பு மற்றும் செயலாக்கத் திறனை உருவாக்கியுள்ளது.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் மைக்ரோ உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது என்று மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் திரு பிரஹலாத் சிங் படேல் மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1896931

***

AP/PKV/GK


(Release ID: 1896971) Visitor Counter : 169