ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023 ஆம் நிதியாண்டின் ஜனவரி வரையிலான கால கட்டத்தில் சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வேக்கு ரூ.1,35,387 கோடி வருவாய்

प्रविष्टि तिथि: 06 FEB 2023 3:22PM by PIB Chennai

2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய், கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் ஈட்டியதைவிட அதிகரித்துள்ளது.

     2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஜனவரி வரையிலான காலக் கட்டத்தில் 1243.46 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கிறது. இதே காலக் கட்டத்தில் முந்தைய ஆண்டு, 1159.08 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன.  இதன் மூலம் 7% சரக்குப் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது. இதேபோல், முந்தைய ஆண்டு ரூ.1,17,212 கோடியாக இருந்த சரக்கு வருவாய், தற்போது ரூ.1,35,387 கோடியாக உயர்ந்துள்ளது.  

     இதேபோல் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 129.12 மில்லியன் டன்னாக இருந்த சரக்குப் போக்குவரத்து 2023 ஜனவரி மாதம் 134.07 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.  இது முந்தைய ஆண்டைவிட 4% சதவீதம் அதிகமாகும்.  மேலும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.13,172 கோடியாக இருந்த சரக்குப் போக்குவரத்து வருவாய், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.14,709 கோடியாக உயர்ந்துள்ளது.   இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 13% அதிகமாகும். 

 

***

AP/ES/UM/RR


(रिलीज़ आईडी: 1896639) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu