மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மீன்வளத் துறைக்கான 2023-24 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய ஒதுக்கீட்டை விட 38.45% அதிகரிப்பு

Posted On: 05 FEB 2023 6:41PM by PIB Chennai

2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தனது உரையில், மீன்வளத் துறைக்கு 2022-23 ஆம் ஆண்டில் 1624.18 கோடி ரூபாயும், 2021-22ஆம் ஆண்டில் 1360 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்ட நிலையில், 2248.77 கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். இது கடந்த நிதியாண்டில் இருந்து 2022-23 நிதியாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் 38.45% அதிகரிப்பைக் குறிக்கிறது.

பிரதமரின் மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா-யோஜனா  என்ற புதிய துணைத் திட்டத்தை அவர் அறிவித்தார். இத்துணைத் திட்டம் ரூ. 6,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டது. மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் மற்றும் மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ள குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள். Y மீன்வளத் துறையை முறைப்படுத்துவதற்கு கவனம் செலுத்தும் தலையீட்டை எதிர்பார்க்கிறது. இதில் டிஜிட்டல் உள்ளடக்கம், மூலதன முதலீடு மற்றும் செயல்பாட்டு மூலதனத்திற்கான நிறுவன நிதி அணுகலை எளிதாக்குதல், மீன்வளர்ப்பு மற்றும் மீன்வளத்தில் இயங்கும் குறுந்தொழில்களை ஊக்குவிக்கும்  நிறுவனங்களைக் கொண்டுவருவதற்கான ஊக்குவிப்புகள் ஆகியவை அடங்கும். மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையானது மதிப்புச் சங்கிலித் திறனில் பணியாற்றுதல், நுகர்வோருக்கு பாதுகாப்பான மீன் பொருட்களை வழங்குவதற்கான விநியோகச் சங்கிலிகளை நிறுவுவதற்கு குறு மற்றும் சிறு நிறுவனங்களை ஊக்குவிப்பது, அதன் மூலம் உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்துதல், இத்துறையில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

பஞ்சாயத்து அளவில் மீன்பிடி கூட்டுறவு உள்ளிட்ட தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குவது குறித்தும் பட்ஜெட் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அடிமட்ட அளவில் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குவது இத்துறையை முறைப்படுத்துவதுடன், மீன் உற்பத்தி மற்றும் அதன் அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ள மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும். கூட்டுறவு அமைச்சகத்திற்கு ரூ.900 கோடி ஒதுக்கீடு மூலம் கூட்டுறவுகளின் வளர்ச்சி, கடன்களுக்கான மேம்படுத்தப்பட்ட வரம்புகள், டிடிஎஸ் வரம்புகள், ரொக்க வைப்புத்தொகை மற்றும் தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் மற்றும் நிதியுதவிகளை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கான கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மீன்பிடித் துறைக்கான முதலீட்டு நிறுவன நிதியை கணிசமாக மேம்படுத்தும். மேலும் இறால் தீவனத்திற்கு தேவையான சில உள்ளீடுகள் மீதான இறக்குமதி வரியை குறைக்கும் அறிவிப்பு இறக்குமதி செலவு மற்றும் உற்பத்தி செலவுகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீன் உணவுக்கான அடிப்படை சுங்க வரி 15% லிருந்து 5% ஆகவும், க்ரில் மீல் மீது 15% லிருந்து 5% ஆகவும், பாசிப் பிரைம் (மாவு) மீது 30% லிருந்து 15% ஆகவும், மீன் கொழுப்பு எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி 30% லிருந்து 15% ஆகவும் குறைப்பு. நீர்வாழ் தீவனங்களை தயாரிப்பதற்கு 15% முதல் 5% வரையிலான கனிம மற்றும் வைட்டமின் கலவைகள் தீவனச் செலவைக் குறைப்பதுடன், உள்நாட்டுத் தீவனம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும். அத்துடன் இந்திய இறால்களின் ஏற்றுமதிப் போட்டியை கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுக்கான 3 சிறப்பு மையங்களின் அறிவிப்பு இந்தியாவில் இந்தச்சூழல் அமைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது மீன் சந்தைப்படுத்தல் முறைகளை மேம்படுத்துவதற்கும், கண்டுபிடிப்பு மற்றும் தரத்திற்கான பிளாக்-செயின் அடிப்படையிலான தீர்வை விரைவாக செயல்படுத்துவதன் மூலம் அதிகரித்த மதிப்பு உணர்தலுக்கும் பெரும் வாய்ப்பை வழங்குகிறது.

 

----

PKV/GS/KPG



(Release ID: 1896477) Visitor Counter : 207