எரிசக்தி அமைச்சகம்

ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ் பெங்களூரில் நடைபெற்ற "சுத்தமான ஆற்றல் மாற்றத்தை" அடைவதற்கான கார்பன் பிடிப்பு பயன்பாடு மற்றும் சேகரிக்கும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றிய சர்வதேச கருத்தரங்கு

Posted On: 05 FEB 2023 5:28PM by PIB Chennai

“கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு' (CCUS) என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் உரையாற்றினார். ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ் பெங்களுருவில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தேசிய அனல்மின் கழகம் (என்டிபிசி) ஏற்பாடு செய்திருந்தது.

மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள என்டிபிசி விந்தியாச்சலில் அமைக்கப்பட்டுள்ள மெத்தனால் ஆலையில் 10 TPD CO2 தொழில்நுட்பத்தின் முப்பரிமாணம் மாதிரி குறித்து மத்திய அமைச்சரிடம் என்டிபிசி தலைமை மேலாண் இயக்குனர் திரு குர்தீப் சிங் விளக்கினார்.

மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. சரஸ்வத் உடன் இணைந்து கரியமில வாயு முதல் தலைமுறை -4 எத்தனால், யூரியா & கார்பனேற்ற மதிப்பீடு போன்ற என்டிபிசியின் பல்வேறு முன்முயற்சிகளை காண ஆர்வம் காட்டினார்.

"சுத்தமான ஆற்றல் மாற்றத்தை" அடைவது மற்றும் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக மாற்றுவதை நோக்கி நகருதல் ஆகியவற்றில் கார்பன் பிடிப்பு பயன்பாடு மற்றும் சேமிப்பு'  ஆகியவை குறித்து  இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளின் தொழில்துறையினர், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு விவாதிக்கப்பட்டது.

திரு உஜ்வல் காந்தி பட்டாச்சார்யா, இயக்குனர் (திட்டம்), திரு ஷஷாந்த், தலைமை பொது மேலாளர் (நேத்ரா), திரு ஹர்ஜித் சிங், தலைமை பொது மேலாளர் (சிசி) மற்றும் பிற மூத்த அதிகாரிகளும்

------

PKV/VJ/KPG



(Release ID: 1896463) Visitor Counter : 185