குடியரசுத் தலைவர் செயலகம்

சந்த் குரு ரவிதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 04 FEB 2023 7:14PM by PIB Chennai

சந்த் குரு ரவிதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு   குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

குரு ரவிதாஸின் பிறந்த நாளில்  நாட்டுமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாந்த குரு ரவிதாஸ், ஒரு தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் தூதுவராகவும் வாழ்ந்து காட்டினார்.  சாதி மற்றும் மத அடிப்படையிலான குற்றச் செயல்களை இந்த சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கு அயராது பாடுபட்டவர். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர். சமூகம் சார்ந்த பல்வேறுப் பிரச்னைகள் குறித்து பாடல்களை எழுதியவர்.   

அவரது வாழ்க்கை, தியாகத்திற்கும், தவத்திற்கும் தனித்துவமான எடுத்துக்காட்டு. மனிதகுலத்திற்கு சேவை ஆற்றுவதையேக் கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதியவர். அவரது போதனைகளைக் கடைப்பிடிப்பதுடன், நாட்டுமக்களின் நலனுக்காக அவரது வழியில் நாமும் நடப்போம். 

=======

 (Release ID: 1896369) Visitor Counter : 148