மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இந்தியா நடமாடும் வாகனம் குறித்து இந்தியாவின் ஜி-20 ஷெர்பா விளக்கம்

Posted On: 03 FEB 2023 1:08PM by PIB Chennai

இந்தியாவின் ஜி-20 தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி (ஷெர்பா), டிஜிட்டல் இந்தியா தொடர்பாக புதுதில்லி சுஷ்மா சுவராஜ் பவனில் விளக்கம் அளித்தார். அதைத் தொர்ந்து அந்த வாகனம் லக்னோவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. லக்னோவில், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜி-20 பணிக்குழுவின் முதல் கூட்டம் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 15-ம்   தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த நகருக்கு செல்லும் வாகனத்தை லக்னோவிலிருந்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து இந்த வாகனம் பல்வேறு நகரங்களுக்கும் பயணிக்க உள்ளது.

இந்த வாகனத்தில் பிரதமரின் ஜன் தன் திட்டம், டிஜிலாக்கர், ஆதார், உமாங்க், மின்வழி ரசீது, இ-ஔஷாதி, ஆரோக்கிய சேது, கோவின், இ-ரூபி உள்ளிட்ட டிஜிட்டல் இந்தியாவின் பல்வேறு விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்துப் பேசிய திரு அமிதாப் காந்த், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கட்டமைப்புகள் தொடர்பான தகவல்கள் இந்த வாகனத்தில் இடம் பெற்றுள்ளன என்றார்.  இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து  இந்த வாகனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

***

AP/PLM/KPG/RJ


(Release ID: 1896007)