கூட்டுறவு அமைச்சகம்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் தலைமையில் கூட்டுறவு அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நபார்டு, சிஎஸ்சி இ- நிர்வாக சேவை இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
प्रविष्टि तिथि:
02 FEB 2023 7:04PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் தலைமையில் கூட்டுறவு அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நபார்டு, சிஎஸ்சி இ- நிர்வாக சேவை இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர், தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் கூட்டுறவுத்துறையின் ஆன்மாவாக உள்ளது என்று தெரிவித்தார். சுமார் 20 சேவைகளை வழங்குபவர்களாக அவர்களை மாற்றுவதன் மூலம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறினார். தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் பணி மற்றும் பங்களிப்பு கிராமப்புறம் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும் என்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தண்ணீர் விநியோகம், சேமிப்பு உள்ளிட்ட 20 பல்வேறு வகையான நடவடிக்கைகளை தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை ஏற்படுத்த இந்தாண்டு பட்ஜெட்டில் வகை செய்யப்பட்டுள்ளதாக திரு அமித்ஷா கூறினார்.
***
AP/IR/RS/RJ
(रिलीज़ आईडी: 1895851)
आगंतुक पटल : 404