எரிசக்தி அமைச்சகம்
முதல் எரிசக்தி மாற்றப் பணிக்குழுக் கூட்டம் பெங்களூருவில் வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி நடைபெறும்: மத்திய அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் தகவல்
Posted On:
02 FEB 2023 5:27PM by PIB Chennai
முதல் எரிசக்தி மாற்றப் பணிக்குழுக் கூட்டம் பெங்களூருவில் வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி நடைபெறும் என்று மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் திரு.ஆர்.கே.சிங், இந்தாண்டு பெருமைமிக்க ஜி-20 உச்சிமாநாட்டின் தலைமைத்துவப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. ஜி-20 தலைமைத்துவப் பொறுப்பு என்பது சர்வதேச அளவிலான ஒத்துழைப்பிற்கான முதன்மை மன்றமாகும். ஜி-20 உச்சிமாநாட்டு உறுப்பு நாடுகள் உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 85 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதமும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்காகவும் அமையப் பெற்றுள்ளது. எரிசக்தி மாற்றப் பணிக்குழுக் கூட்டத்தில் தொழில்நுட்ப இடைவெளி மற்றும் நிதி ஆதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் விளைவாக பொதுமக்களின் எரிசக்தி தேவைகளைக் கருத்தில் கொண்டு உலகளவில் உறுப்பு நாடுகளுக்கு சரியான நேரத்தில், எந்தவித சமரசமும் இல்லாமல் சிறந்த சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
***
AP/GS/SG/RJ
(Release ID: 1895813)