நிதி அமைச்சகம்

நிதியாண்டு 2022-23 இல் தற்போதைய விலைமதிப்பின் அடிப்படையிலான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 15.4% வளர்ச்சி அடையக் கூடும்

Posted On: 01 FEB 2023 1:01PM by PIB Chennai

தற்போதைய விலைமதிப்பின் அடிப்படையிலான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, நிதியாண்டு 2022-23 இல் 15.4% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டில் 19.5%ஆக இருந்தது. உண்மையான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கையின் படி நிதியாண்டு 2022-23 இல் இந்திய வேளாண் துறை 3.5% வளர்ச்சியடையக் கூடும். இந்த காலகட்டத்தில் வேளாண் ஏற்றுமதிகள் 50.2 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரிப் பருவ காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த உணவு தானியங்களின் மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சராசரி உணவு தானியங்களை விட அதிகமாக, 149.9 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதியாண்டு 2021-22 இல் 10.3%ஆக இருந்த தொழில்துறையின் வளர்ச்சி, நிதியாண்டு 2022-23 இல் 4.1%ஆக இருக்கக்கூடும்.  அதேபோல முந்தைய நிதி ஆண்டில் 8.4%ஆக இருந்த சேவை துறைகளின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.1%ஆக அதிகரிக்கும். விநியோக சங்கிலிகளில் ஏற்பட்டு வரும் தொடர் இடர்பாடுகள் மற்றும் நிலையில்லாத புவி அரசியல் சூழல்களுக்கு இடையேயும் நிதியாண்டு 2022-23 இல் ஏற்றுமதிகள் 12.5% வளர்ச்சி காண உள்ளன.

******

 

(Release ID: 1895288)



(Release ID: 1895661) Visitor Counter : 336