நிதி அமைச்சகம்

ரயில்வேக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக ரூ.2.40 லட்சம் கோடி மூலதன ஒதுக்கீடு

Posted On: 01 FEB 2023 1:19PM by PIB Chennai

உள்கட்டமைப்பு, உற்பத்தி திறன் ஆகியவற்றில் முதலீடுகள் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெருந்தொற்று குறைந்தற்கு பின்னர், தனியார் முதலீடுகள்   மீண்டும் அதிகரித்து வருகின்றன. இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2023-24 மத்திய பட்ஜெட் உரையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி  மூலதனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு  அதிகமானதாகும். மேலும்  2013-14ல் மேற்கொள்ளப்பட்ட செலவீனத்தை விட 9 மடங்கு இது அதிகமாகும்.

 துறைமுகங்கள், நிலக்கரி, எஃகு, உரம் மற்றும் உணவு தானியங்கள் துறைகளுக்கான கடைசி மைல் இணைப்புக்கான நூறு முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தனியார் துறையில் ரூ.15,000 கோடி உட்பட ரூ.75,000 கோடி முதலீட்டுடன் இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த ஐம்பது கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள், நீர் ஏரோட்ரோம்கள் மற்றும் முன்கூட்டியே தரையிறங்கும் மைதானங்கள் புதுப்பிக்கப்படும் என்று நிதி அமைச்சர் மேலும் கூறினார்.

ஒருங்கிணைந்த இணக்கமான முதன்மை உள்கட்டமைப்பு பட்டியலை மதிப்பாய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும். அமிர்த காலத்திற்கு ஏற்ற வகையில், நிதியுதவி கட்டமைப்பை குழு பரிந்துரைக்கும்.

------ 

(Release ID: 1895301)

PKV/AG/RR(Release ID: 1895647) Visitor Counter : 154