நிதி அமைச்சகம்

எம்எஸ்எம்இ-களுக்கு திருத்தியமைக்கப்பட்ட கடன் உத்தரவாதத் திட்டத்திற்கு ரூ.9,000 கோடி

Posted On: 01 FEB 2023 1:07PM by PIB Chennai

எம்எஸ்எம்இ-களுக்கு திருத்தியமைக்கப்பட்ட கடன் உத்தரவாதத் திட்டத்திற்கு ரூ.9,000 கோடி ஒதுக்கப்படுவதாக  மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2023-24-ல் அறிவித்துள்ளார்.  இது 2023 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் வளர்ச்சி என்ஜினாக செயல்படும் எம்எஸ்எம்இ-களில் ரூ.2 கோடி வரை ஆண்டு வரவு செலவு மேற்கொள்ளும் நிறுவனங்களும் ரூ.50 லட்சம் வரை வரவு செலவு மேற்கொள்ளும். தொழில்முறையாளர்களும் அனுமான வரிவிதிப்பில் பயன்பெற முடியும் என்று அவர் கூறினார்.  இதற்கான வரம்புகள் முறையே ரூ.3 கோடி, ரூ.75 லட்சமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அமிர்த காலத்தின் தேவைகளை எதிர்கொள்ளும் விதமாக, நிதித்துறையில், முறைப்படுத்தல் வசதி செய்யப்படுவதாக திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். தற்போதுள்ள முறைப்படுத்தல்களை எளிதாக்கவும், செலவைக் குறைக்கவும், கேட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து பொதுமக்கள் மற்றும் முறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து  ஆலோசனைகள் கோரப்படவுள்ளன. இதற்கான காலவரம்பும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*** 

(Release ID: 1895292)

SMB/KPG/RR(Release ID: 1895646) Visitor Counter : 156