நிதி அமைச்சகம்

பணியாளர்களை வேலைவாய்ப்புக்கான திறன்களுடன் கூடியவர்களாக மாற்ற அரசு உறுதிபூண்டு தீவிரமாக செயல்படுகிறது

Posted On: 31 JAN 2023 1:34PM by PIB Chennai

நாட்டின் திறன் சூழலை மேம்படுத்த தேசிய திறன் மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக்கொள்கை 2020ன் கீழ், தொழில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 

தொழில் கல்வியை பொதுக்கல்வியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், நாட்டின் கல்வி முறையில் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2021ம் நிதியாண்டில்  காலமுறை இடைவெளி  பணியாளர் ஆய்வு, 15 முதல் 29 வயதுக்கிடையே உள்ளவர்களிடையே தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அதிகரித்துள்ளதை காட்டுகிறது. 2019-மற்றும் 2020ம் நிதியாண்டை ஒப்பிடுகையில், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கையும் 2021ம் நிதியாண்டில் அதிகரித்துள்ளது.  ஆண்கள் மற்றும் பெண்கள், கிராமப்புற மற்றும் நகரப்புறங்கள் என அனைத்து தரப்பிலும், திறன்கள் அதிகரித்துள்ளன.

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், மக்கள் கல்வி நிலையத் திட்டம், தேசிய தொழில் பழகுநர்  ஊக்குவிப்புத்திட்டம், கைவினைஞர்கள் பயிற்சித் திட்டம், கைவினைஞர் பயிற்றுனர் பயிற்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம், பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள், பெண்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், திறன் பயிற்சிகளை பெற்றுள்ளனர்.

திறன் இந்தியா இயக்கத்தின் மூலம் 20 மத்திய அமைச்சக்கங்களின் வாயிலாக நாடு முழுவதும்,  பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1894912

***

AP/PLM/RS/GK



(Release ID: 1895124) Visitor Counter : 200