நிதி அமைச்சகம்

மூலதன பங்குச்சந்தை வர்த்தகத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது

Posted On: 31 JAN 2023 1:52PM by PIB Chennai

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உள்நாட்டு அமைப்புகள்,  சில்லறை முதலீட்டாளர்களின் அதிக பங்களிப்பால், கடந்த ஆண்டில் இந்திய மூலதன பங்குச்சந்தை வர்த்தகத்தின் செயல்பாடுகள் சிறப்பான வகையில் இருப்பதாக பொருளாதார ஆய்வு அறிக்கை 2022-2023 தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

காப்பீட்டு சந்தையில் டிஜிட்டல் மயமாக்கல், அந்நிய நேரடி முதலீடு வரம்புகள் அதிகரிப்பு ஆகியவை இந்தியாவின் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

உலக அளவில் ஒட்டுமொத்தமாக பொருளாதார நிச்சயமற்ற தன்மை, முன்னெப்போதும் இல்லாத  பணவீக்கம், நிதி ஆதாரக்கொள்கைகளில் கடுமையான வரம்புகள், நிலையற்ற சந்தைகள் போன்றவற்றின் மத்தியிலும் இந்தியாவின் மூலதனச் சந்தை வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்த ஆண்டு சிறப்பாகவே இருந்தது என்றும் அந்த அறிக்கை விளக்கியுள்ளது.  கடந்த 2022 நிதியாண்டுடன் (நவம்பர் 2021 வரை) ஒப்பிடும்போது, ஆரம்ப பொது சலுகைகளுடன் வரும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்ககளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இதன் விளைவாக திரட்டப்பட்ட மொத்த நிதி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திரட்டப்பட்ட நிதியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

 

இந்த ஆண்டு இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆரம்ப பொது சலுகைகளை பெற்றது.  மே 2022- ல் மத்திய அரசு இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளை மாற்றியமைத்து பங்குச் சந்தை பட்டியலில் கொண்டு வந்தது. இதன் மூலம் எல்ஐசியின் ஆரம்ப பொது சலுகைகளை இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆரம்ப பொது சலுகையாக மாற்றியது.

***

AP/GS/KRS

 



(Release ID: 1895051) Visitor Counter : 238