இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில், வீரர்களின் அனுபவத்தை மேம்படுத்த சிறப்பு செயலி அறிமுகம்

Posted On: 29 JAN 2023 4:00PM by PIB Chennai

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிக்காக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சிறப்பு கைபேசி செயலியை (மொபைல் ஆப்) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், விளையாட்டு வீரர்களின் பெற்றோர் மற்றும் அதிகாரிகள் விளையாட்டுப் போட்டி தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்தச் செயலி மூலம் எளிதில் பெற முடியும். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளுக்காக பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை  ஆகும்.

 

இந்தச் செயலி வீரர்களுக்கான ஒரு பிரத்யேக உள்நுழைவு அம்சத்தைக் கொண்டுள்ளது. வீரர்கள் பதிவுசெய்த நேரத்திலிருந்து, முழுமையாக அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.  போட்டி தொடங்கும் முன், வீரர்களின் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க இந்தச் செயலி வாய்ப்பளிக்கிறது. இது விளையாட்டு வீரர்களுக்கு பதிவு செய்யும் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.

 

வீரர் அல்லது வீராங்கனை விளையாட்டுகளுக்குப் பதிவு செய்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடங்களுக்கு வரும்போது, தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலை, வீரர்கள் தங்க வேண்டிய தங்குமிடம், விளையாட்டு வீரர்களுக்கான போக்குவரத்துத் திட்டம் ஆகியவற்றை இச்செயலியில் சரிபார்க்கலாம். அத்துடன் விளையாட்டு வீரர்கள் அவசரகாலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய முக்கியமான தொடர்பு எண்களும் இதில் உள்ளன. மேலும், விளையாட்டுகளின் போது விளையாட்டு வீரர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உடனடி பதில்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக, வாட்ஸ் அப் சாட்போட் (Whatsapp Chatbot) உருவாக்கப்பட்டுள்ளது.

 

விளையாட்டு ரசிகர்களுக்கு, இந்தச் செயலி, போட்டி அட்டவணைகள், பதக்க எண்ணிக்கை, விளையாட்டு அரங்குகளின் முகவரி மற்றும் புகைப்படத் தொகுப்புகள் போன்ற தகவல்களை வழங்குகிறது.

 

இந்தச் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பயன்படுத்த முடியும். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

 

செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புகள்:

 

ப்ளே ஸ்டோர் :

https://play.google.com/store/apps/details?id=com.sportsauthorityofindia.kheloindiagames

 

ஆப் ஸ்டோர்:

https://apps.apple.com/in/app/khelo-india-games/id1665110083

 

வாட்ஸ் அப் சாட்போட்:

https://wa.me/919667303515?text=Hi%21

*****

 

PLM / DL


(Release ID: 1894497) Visitor Counter : 276