தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஸ்சிஓ திரைப்பட விழாவில் “இந்தியா – எஸ்சிஓ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்” பற்றிய வட்டமேசை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது

Posted On: 29 JAN 2023 12:36PM by PIB Chennai

மும்பையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழாவிற்கிடையே “இந்தியா – எஸ்சிஓ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்” பற்றிய வட்டமேசை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய தொழில்துறை பங்குதாரர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட விழாவின் ஜூரி உறுப்பினர்கள் இடையேயும்  இந்தியா மற்றும் எஸ்சிஓ நாடுகளுக்கு இடையேயும் ஒத்துழைப்புக்கு  சாத்தியமான வழிகள் பற்றி ஆராய்வதை எளிதாக்குவது இந்த அமர்வின் நோக்கமாக இருந்தது. தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா திரைப்பட வசதி அலுவலகம் ஆகியவற்றின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமர்வுக்கு, தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர்  நீரஜா சேகர் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் (திரைப்படங்கள்) மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் பிரிதுல் குமார் ஒருங்கிணைத்தார்.

 

 எஸ்சிஓ உறுப்பு நாடுகள் திறமை பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும், இந்தியாவுடனான இணை தயாரிப்பு ஒப்பந்தங்களைக்  கண்டறியவும், கூட்டுத் திட்டங்கள் மூலம் தற்போதுள்ள இந்திய திரைப்பட ஊக்குவிப்புகளின் பலன்களைப் பெறவும் இந்த அமர்வில் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவிலும் பங்கேற்கும் நாடுகளிலும் ஒப்பீட்டளவில் வலுவான திரைப்படத் தொழில்கள் உள்ளன மற்ற நாடுகளின் திரைப்படத் தொழில்களுக்கான இலக்காக இந்தியாவை மேம்படுத்த மகத்தான வாய்ப்பு  உள்ளது. இந்த நாடுகளில் படமாக்கப்படும் இந்தியத் திரைப்படங்களுக்கான வசதிகளை வழங்கும்  சாத்தியக்கூறுகளும் உள்ளன.

இந்தியா தற்போது சீனா மற்றும் ரஷ்யாவுடன் இருதரப்பு ஆடியோ-விஷுவல் இணை தயாரிப்பு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. தஜிகிஸ்தான், கஜக்ஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற உறுப்பு நாடுகளுடனும், துருக்கி போன்ற உரையாடல் நாடுகளுடனும் இணை தயாரிப்பு ஒப்பந்தங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன. இருதரப்பு ஒப்பந்தங்கள் இல்லாவிட்டாலும் இந்தியா, நேபாளம்இலங்கை ஆகிய நாடுகளின் திரைப்படத் தொழில்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் ஒரு இந்திய-சீன இணை தயாரிப்பும்ஒரு இந்திய-ரஷ்ய இணை தயாரிப்பும்  உள்ளது.

சீனா (5), ஈரான் (2), கஜக்ஸ்தான் (1), நேபாளம் (1), ரஷ்யா (2), இலங்கை (1) துருக்கி (1) போன்ற எஸ்சிஓ நாடுகளின்  பல திரைப்படங்களுக்கு இந்தியாவில் படப்பிடிப்பு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றும் பல இந்தியப் படங்கள் கிட்டத்தட்ட அனைத்து உறுப்பு நாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு உற்பத்தி மற்றும் அதிகாரப்பூர்வ இணை தயாரிப்புகளுக்கான ஊக்கத்தொகையின் அடிப்படையில் ஒட்டுமொத்த சூழலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் வட்டமேசையின் முக்கிய நோக்கமாகும்.

*****

SMB / DL


(Release ID: 1894474) Visitor Counter : 175