பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்டார்ட் அப் 20 தொடக்க கூட்டம்

प्रविष्टि तिथि: 28 JAN 2023 3:22PM by PIB Chennai

கடற்படை புத்தாக்கம் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் அமைப்பு (என்ஐஐஓ) இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ் ஸ்டார்ட் அப் 20 தொடக்க கூட்டத்தின் போது மருத்துவ கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியது. ‘ஆட்யண்ட்’ ஆக்சிஜன் மறுசுழற்சி அமைப்பு ‘ஸ்பந்தன்’ குறைந்த விலை டிஜிட்டல் ஸ்டெதாஸ்கோப், நெபிரோ’ ஸ்மார்ட் போர்ட்டபிள் நெபுலைசர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஜி 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் ஜி20 ஷெர்பா திரு அமிதாப் காந்த்நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு பரமேஸ்வரன் ஐயர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கடற்படை அதிகாரிகளுடன் உரையாடினர். "இந்திய கடற்படை - தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் புதுமை" என்ற தலைப்பில் இந்திய கடற்படை செய்து வரும் புதுமையான பணிகளை அவர்கள் பாராட்டினர்.

இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட இரண்டு நாள் நிகழ்ச்சி  ஜனவரி 28,29  அன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. ஸ்டார்ட்அப்20, ஸ்டார்ட்-அப்களை ஆதரிப்பதற்கும், ஸ்டார்ட்-அப்கள், கார்ப்பரேட்டுகள், முதலீட்டாளர்கள், புதுமை முகமைகள் மற்றும் பிற முக்கிய சுற்றுச்சூழல் பங்குதாரர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை செயல்படுத்துவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

*****

 

PKV / DL


(रिलीज़ आईडी: 1894306) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu